திருச்சி சிறையில் போக்சோ தண்டனை
கைதி உயிரிழப்பு.
திருச்சி மத்திய சிறையில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தண்டனைக் கைதி ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள நம்பிவயல் கிராமம் ஆதி திராவிடர் தெருவைச் சேர்ந்தவர்
ம.சுரேந்திரன் (வயது 35). இவர் திருவோணம் காவல் நிலையத்தில், போக்சோ வழக்கில் கைதாகி, பின்னர் அந்த வழக்கு தொடர்பான தீர்ப்பில் 11 ஆண்டுகள் தண்டனை பெற்று கடந்த 2018 முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு நேற்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக திருச்சி கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.