நூற்றாண்டு எனக் கூறி தொடர்ந்து மாணவிகளிடம் பணம் வசூலில் திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி. நடவடிக்கை: எடுப்பாரா மாவட்ட ஆட்சித் தலைவர்?திருச்சி பாஜக வழக்கறிஞர்.
திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் லெனின் பாண்டியன் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார் அதில் அவர் கூறியிருப்பதாவது:
1. திருச்சி ஹோலிகிராஸ் (தன்னாட்சி) கல்லூரி, பல்லாண்டுகளாக மாணவிகள் விடுதி முறையான அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக நடைப்பெற்று வருகிறது. இதுகுறித்து ஏற்கனவே புகார்கள் அளிக்கப்பட்டும் மேற்படி கல்லூரி நிர்வாகத்தின் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
2.
ஹோலி கிராஸ் கல்லூரியின் நூற்றாண்டு விழா செலவுக்கான வசூல் எனக்கு கூறி
கடந்த மாதம் பொன்னியின் செல்வன் திரைப்படம் காண்பதற்காக மாணவிகள் கட்டாயப்படுத்தப்பட்டு அதற்காக பணம் வசூல் செய்யப்பட்டு திரைப்படத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பொன்னியின் செல்வன் திரைப்பட விநியோகம் ஆளுங்கட்சியினருக்கு வேண்டியவர்கள் செய்ததால் அதற்காக மாணவிகள் கட்டாயம் திரைப்படம் பார்க்க கட்டாயப்படுத்தப்பட்டனர்.
3.
அதுபோல தற்போது ஒரு கிராமத்தை தத்து எடுப்பதாக கூறி வருகின்ற 18-11-2022 அன்று திரைப்பட பிண்ணனி பாடகர் சித் ஸ்ரீராமின் திரைப்பட இன்னிசைக்கச்சேரியை மேற்படி திருச்சி ஹோலிகிராஸ் (தன்னாட்சி) கல்லூரி நிர்வாகம் செய்து வருகிறது. இதற்காக மாணவிகளிடம் ரூ.500/ முதல் ரூ.2000/- வரை கட்டாய வசூல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்நிகழ்ச்சி மூலம் ரூ.2 கோடி நிதி திரட்டி லாபம் பார்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஒரு கல்லூரி அதற்கு தொடர்பற்ற விசயத்தில் லாபம் பார்க்க ஏழை மாணவிகள் கட்டாயப்படுத்தப்படுவதை தடுப்பது அவசியமாகும். மேலும் மாணவிகள் இசை நிகழ்ச்சியை நடனமாடிக்கொண்டு பார்க்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. நமது கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. (தற்போது நன்கொடை புத்தகம் அச்சடித்து அதன் மூலம் பண வசூலிலும் ஈடுபட்டு வருகிறது கல்லூரி நிர்வாகம்)
ஆகவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் திருச்சி ஹோலிகிராஸ் (தன்னாட்சி) கல்லூரி, மாணவிகள் விடுதி முறையான அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக நடத்தப்படுவது. ஆபத்து நிகழும் முன்பு உரிய சட்ட நடவடிக்கையும், திரைப்படம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சி பேரில் மாணவிகளிடம் கட்டாய வசூல் செய்து கசக்கி பிழிவதையும் தடுக்க உரிய நடவடிக்கையும் எடுக்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.
என்றும் தேசப்பணியில் வழக்கறிஞர் லெனின் பாண்டியன் தனது மனுவில் கூறியுள்ளார்.