Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

2009ல் ரூ.5000 லஞ்சம் வாங்கிய திருச்சி இன்ஸ்பெக்டருக்கு தற்போது மூன்று ஆண்டு கடுங்கால் தண்டனை.

0

ரூ.5000 லஞ்சம் வாங்கிய வழக்கு
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டருக்கு மூன்றாண்டு ஜெயில் தண்டனை.

திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் முருகேசன். இவர் தற்போது திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2009ல் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தபோது அந்தப் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண் தான் வேலை செய்த அரிசி ஆலை உரிமையாளர் செல்லையா தாக்கியதாக புகார் அளித்தார்.
அதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்யாமல் இருக்க இன்ஸ்பெக்டர் முருகேசன் செல்லையாவிடம் ரூ.5000 பெற்றார்.
அதைத்தொடர்ந்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் முருகேசனை கையும் களவுமாக பிடித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் இன்று நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு கூறினார். ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு
7ன் கீழ் ஓராண்டு கடுங்காவல் தண்டனையும்,
பிரிவு 13/டி பிரிவின் கீழ் மூன்று ஆண்டு கடுங்காவல் மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் மேற்கண்ட தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு வக்கீல் சுரேஷ்குமார் ஆஜராகினார்.

Leave A Reply

Your email address will not be published.