தமிழ்நாடு ஹேண்ட்பால் அசோசியேஷனின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு.
திருச்சியில் இந்திய ஹேண்ட்பால் ஃபெடரேஷன் பொது செயலாளர் ஜெனரல் ஸ்ரீ ப்ரித்பால் சிங் சலுஜா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஹேண்ட்பால் அசோசியேஷனின் பழைய பொறுப்பாளர்களை நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதன்படி தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக சங்கத்தின் சேர்மன் ஆக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த துரை அவர்களும், தலைவராக சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த டி.ஆரோக்கியராஜ், பொதுச் செயலாளராக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.கருணாகரன், பொருளாளராக தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் ஸ்ரீதரன், பிரான்சிஸ், கங்காதரன், ஸ்டான்லி விநாத், திகயராஜன், என்.சிவராமகிருஷ்ணன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 30 மாவட்டத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.