Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மத்திய கல்வி துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பேட்டி.

0

தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை பிரமாதமாக கடைபிடிக்கப்பட்டு வருவதாக மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் திருச்சியில் பேட்டி

திருச்சியில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும். திருச்சி பாராளுமன்றமும் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.

புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு சிறப்பாக பின்பற்றுகிறது. புதிய கல்வி கொள்கையை எதிர்க்கிறோம் என தெரிவித்தாலும் எழுத்து பூர்வமாக அவர்கள் எதிர்க்கவில்லை.
புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அறிக்கையை சமர்பித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளும் இதனை பின்பற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் திருச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு அரசு அதிகாரிகள் மத்திய அரசு பார்த்து பயப்படுகிறார்கள் என பேசியது குறித்து கேள்வி எழுப்பிய போது
மத்திய அரசு தமிழ்நாடு அதிகாரிகளை மிரட்டவில்லை. அவ்வாறெல்லாம் இல்லை. நாங்கள் நேர்மையாக வெளிப்படை தன்மையுடன் ஆட்சி செய்து வருகிறோம் என்றார்.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் நவயோதயா பள்ளிகள் அமைக்கப்படும். இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் கேட்பவர்களுக்கு நமது பள்ளிகள் அமைத்து தரப்படும் .

மேலும் மத்திய பல்கலைக்கழகத்தின் கிளை திருச்சியில் கொண்டு வருவதற்கு தமிழக அரசு நிலம் கொடுத்தால் அது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பதிலளித்தார்.

பேட்டியின் போது திருச்சி பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன்,மாவட்ட துணை தலைவர் சந்துரு இல. கண்ணன்,இந்திரன் உன்னிடம் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.