திருச்சி மாவட்டத்தில், 7 இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டத்தில்
நவம்பர் 01ம் தேதி (முதல் வெள்ளிக்கிழமை)
துறையூர் கோட்ட அலுவலகத்திலும்,
4 ம் தேதி முசிறி கோட்ட அலுவலகத்திலும்,
08ம் தேதி, லால்குடி கோட்ட அலுவலகத்திலும்,
11ம் தேதி ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்திலும்,
15ம் தேதி திருச்சி நகரிய கோட்டஅலுவலகத்திலும்,
18ம்தேதி திருச்சி கிழக்கு கோட்ட அலுவலகத்திலும்,
22ந்தேதி மணப்பாறை கோட்ட அலுவலகத்திலும்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது