திருச்சியில் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழா.அனைவரும் திரளாக பங்கேற்க மாநில செயலாளர் வெங்கடேசன் அழைப்பு.
திருச்சியில் நாளை நடைபெற உள்ளது.
முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழா.
மாநில செயலாளர் வெங்கடேசன் அழைப்பு.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில செயலாளரும், திருச்சி மாவட்ட பொதுச் செயலாளருமான ஓய்.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 -ஆவது ஜெயந்தி விழா திருச்சியில் காலை 7 மணிக்கு நடக்கிறது. திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தேவர் சிலை முன்பு காலையில் 60-வது குருபூஜை மற்றும் சிறப்பு ஆராதனை நடக்கிறது.
இதைத் தொடர்ந்து மாநில செயலாளரும்,
மாவட்ட பொதுச் செயலாளருமான ஒய்.வெங்கடேசன் தலைமையில் மாநகர் மாவட்ட தலைவர் முருகையா தேவர், மாநில பொதுக்குழு உறுப்பினர் காசிமாயத்தேவர் ஆகியோர் முன்னிலையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
தொடர்ந்து மாபெரும் அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சிகளில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள் , பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.