ஸ்ரீரங்கத்தில் நாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம நபர்கள்.
ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் அருகில் உள்ள சங்கர் நகரை சேர்ந்தவர் சக்திவேல் இவர் தனது வீட்டில் ஐந்து வயது உடைய பொமேரியன் நாய் வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு விட்டிற்கு வெளியே பால்கனி அருகில் நாய் தூங்கிக் கொண்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை சக்திவேல் வீட்டின் கதவை திறந்து வெளியே வந்து பார்த்த பொழுது நாய் கழுத்தை அறுக்கப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சடைந்தார்.
இது குறித்து சக்திவேல் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம நபர்கள் யார் அவர்கள் எந்த நோக்கத்திற்காக இந்த செயலில் ஈடுபட்டனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.