திருச்சியில் சண்டையை விலக்கிய சப் இன்ஸ்பெக்டர் கையை பீர் பாட்டிலால் கிழித்த வாலிபர்..
திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே நேற்று இரவு கோட்டை காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வள்ளுவர் நகரை சேர்ந்த 15 க்கும் மேற்பட்டோர் கல்யாண சுந்தரம் நகர் பகுதியில் உள்ள ஜீவா நகரை சேர்ந்த தனசேகரன் என்பவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
அதை பார்த்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பன் இரு தரப்பினரிடையே சமாதானம் செய்து வைக்க இடையில் நுழைந்து முயற்சி செய்துள்ளார்.
இதில் வள்ளுவர் நகரை சேர்ந்த 15 பேர் கொண்ட கும்பலில் இருந்து ஒருவர் பீர் பாட்டிலால் சிறப்பு உதவி ஆய்வாளரின் கையை கிழித்துள்ளார்.
மேலும் அங்கிருந்து அனைவரும் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு சிறப்பு உதவி ஆய்வாளரை பீர் பாட்டிலால் கிழித்த நபரை தேடி வருகின்றனர்.