திருச்சி லால்குடியில்
அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம்
ப.குமார் பங்கேற்பு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் லால்குடி சப்தரி ஈஸ்வரர் கோவில் பகுதியில் அ.தி.மு.க. பொன் விழா ஆண்டு நிறைவு மற்றும் 51 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் ப. குமார் தலைமை தாங்கி பேசினார்.
லால்குடி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் டி.அசோகன், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சூப்பர் டி.என்.டி. நடேசன், நகர கழகச் செயலாளர் பொன்னி சேகர் என்கிற சந்திரசேகர், லால்குடி நகர் மன்ற உறுப்பினர் ராஜம் காத்தான், பூவாளூர் பேரூர் கழக செயலாளர் எஸ். ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட அவைத்தலைவர் அருணகிரி, மாவட்ட இணை செயலாளர் ரீனா செந்தில், துணை செயலாளர் சுபத்ரா தேவி, பொருளாளர் நெட் இளங்கோ, மகளிர் அணி செல்வி மேரி ஜார்ஜ், புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், தெற்கு ஒன்றிய செயலாளர் டி.என். சிவக்குமார், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அருண் நேரு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் டோமினிக் அமுல்ராஜ், குள்ளம்பாடி பேரூர் கழக செயலாளர் ஜேக்கப் அருள்ராஜ், லால்குடி பேரூர் கழக செயலாளர் பிச்சை பிள்ளை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியில் முன்னாள் துணை சபாநாயகரும் கழக அமைப்புச் செயலாளருமான வரகூர் அருணாச்சலம், தலைமை கழக பேச்சாளர்கள் தீப்பொறி முருகேசன், அன்பு முருகன், வேதை சிவ சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.எம். பாலன், மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சின்னசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
முடிவில் லால்குடி நகர்மன்ற உறுப்பினர்கள் மருதமலையான், முகமது பெரோஸ், துரை பிரியங்கா ஆகியோர் நன்றி கூறினர்.