..
அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு
“அடர் வனம்” உருவாக்கிய அரசு பள்ளி .
தா.பேட்டை அடுத்துள்ள காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் 91-வது பிறந்த நாளை முன்னிட்டு செம்மண் கரட்டை அடுத்துள்ள ஏரிக்கரையின் ஒரு பகுதில் 91 மரக்கன்றுகள் நட்டு அடர் வனம் உருவாக்கினர்…..
வேம்பு,புன்னை, நாவல்,தேக்கு, பூவரசு ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டன.
பள்ளியின் தலைமை ஆசிரியர் தி.கீதா தலைமையில் மாணவர்கள் தினேஷ், அரிகிருஷ்ணன், கார்த்திகேயன், நிர்மலா, தர்ஷினி ஆகியோர் இந்த பணியில் ஈடுபட்டனர்.
சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக உருவாக்கும் இந்த அடர் வனத்தை பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் ஊர் பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.