திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 47வது வார்டு, ஏர்போர்ட் அருகே உள்ள அம்பேத்கர் நகர் பொதுமக்களின் பல வருட கோரிக்கையான நீண்ட தொலைவு சென்று தண்ணீர் பிடிக்க கஷ்டப்படும் காரணமாக குறுக்குத் தெருவில் குடிதண்ணீர் இணைப்பு கோரியிருந்தார்கள்.
மாநகராட்சியில் இக்கோரிக்கைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையால் நித்தம் அல்லல்படும் பொதுமக்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு,
அப்பகுதி பொதுமக்களின் துன்பங்களைப் போக்கும் வகையில் 47வது வார்டு மாமன்ற உறுப்பினர் ப_செந்தில்நாதன் தனது சொந்த செலவில் குடிநீர் இணைப்பு பணிகளை மேற்கொண்டு, குடிநீர் கொண்டு வந்து சேர்த்து உள்ளார்.
அப்பகுதி பொதுமக்கள் புதிதாக போடப்பட்ட குடிநீர் குழாய்களுக்கு பூஜைகள் செய்து, மகிழ்வுடன் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சிறுபான்மை அணி இணைச் செயலாளர் நிக்சன், வட்ட இணைச் செயலாளர் நீலகண்டன், அம்மா தொழிற்சங்க பேரவை அணி இணைச் செயலாளர் கருணாநிதி, மற்றும் நெசவாளர் அணி துணைத்தலைவர் தசங்கர் மற்றும் ஏராளமான கலந்து கொண்டனர்.
ஆளும் கட்சி கவுன்சிலர்கள் கூட சொந்த செலவில் எதுவும் செய்யாத நிலையில் தங்கள் பகுதிக்கு தனது சொந்த செலவில் குடிநீர் இணைப்பு பெற்று தந்த கவுன்சிலர் செந்தில்நாதனை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.