குமார் தலைமையில் நடைபெற்ற திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் மு.க. ஸ்டாலினை கண்டித்து தீர்மானம்.
அதிமுக திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமை வகித்தார். அதிமுக 51 ஆவது ஆண்டு தொடக்க விழாவை ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமியை ஒரு மனதாக தேர்தெடுக்கவும், அவரின் தலைமையில் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றிட ஏதுவாக வாக்குசாவடி முகவர்களை தேர்வு செய்யும் பணிகளை தொடங்க வேண்டும்.
தமிழகஅரசின் மின்கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு ஆகியவற்றை வன்மையாக கண்டிப்பது.
அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசை வன்மையாக கண்டிப்பது. காவிரி}குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். தமிழக அமைச்சர்கள் முதல் திமுக கவுன்சிலர்கள் வரையிலான அவப்பேச்சுகளை கண்டிக்காத தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை வன்மையாக கண்டிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.