தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசை கண்டித்து திருச்சியில் அமமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்.
மின் கட்டண உயர்வு, சொத்துவரி,உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கும் திமுக அரசை கண்டித்து அ.ம.மு.க.சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திருச்சி ஒருங்கிணைந்த அ.ம.மு.க. மாவட்டம் சார்பில் சிந்தாமணி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொருளாளர், முன்னாள் அரசு கொறடா,மாநகர் மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன்,தெற்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன்,,மாநில இளைஞர் பாசறை தலைவர்,
47வது வார்டு கவுன்சிலர் செந்தில்நாதன், நிர்வாகிகள் சமயபுரம் ராமு, பழனிமாணிக்கம், ராஜராஜ சோழன், செல்வகுமார், குணசேகரன், பசீர் அகமது, ராஜராமநாதன்,
டோல்கேட் கதிரவன், ஸ்ரீபிரியை, இளையராஜா, சசிகுமார்,
சாத்தனூர் ராமலிங்கம், முதலியார்சத்திரம் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வைத்தார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் பேசும்போது திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மாறாக பொதுமக்களுக்கு மின் கட்டண உயர்வு சொத்துவரி, குடிநீர் வரி, போன்றவற்றை உயர்த்தி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும். அப் போது நம்முடைய கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக வருவார் என்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் அமமுக கட்சியின் பொருளாளர் மனோகரன் பேசும் பொழுது கடந்த 10 வருட காலமாக திமுக ஆட்சியில் இல்லாமல் தற்போது ஆட்சியை பிடித்துள்ளார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஆட்சி செய்து வருகிறார்கள். எல்லாத் துறைகளிலும் திமுகவின் குடும்ப அரசியல் நுழைந்து விட்டது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு எதையும் செய்யவில்லை என்று அமைச்சர் கே என் நேரு கூறுகிறார். திருச்சியை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு குறிப்பாக ஜெயலலிதா தலைமையிலான அரசு ரூபாய் பல கோடி மதிப்புள்ள திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார். உதாரணமாக சட்டக் கல்லூரி, பாலிடெக்னிக்,
பட்டாம்பூச்சி பூங்கா இப்படி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.இன்றைக்கு மக்களை வாட்டி வதைத்து வரும் திமுக அரசுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். தமிழகத்தில் முதல்வராக டிடிவி தினகரன் வருவார் என்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர், வண்னை லதா, பரமேஸ்வரி, இன்பராஜ், சரவணன், எனர்ஜி அப்துல் ரகுமான், மோகன்தாஸ்,லதா வேதராஜன், பெஸ்ட் பாபு,சாந்தா, சக்திவேல், அல்லூர் கணேசன்,எம்.கே. குமார், தென்னூர் குலாம் அலி,பாக்யராஜ், வக்கீல்கள் தினேஷ்பாபு, முல்லை சுரேஷ் மற்றும் செந்தமிழ், வெங்கடேசன், நாகநாதர் ராஜூ, ரவி இந்திராணி அனுசுயா,தர்மராஜ், பெரியண்ணன்,எஸ் எம்.ஆர்.ராஜேந்திரன், சாத்தனூர் வாசு, மனோஜ் குமார், தன்சிங், தென்னூர் சேட்டு,கல்நாயக் சதீஷ்குமார்,நெல்லை லட்சுமணன், தென்றல் முருகானந்தம், மாணவரணி முருகானந்தம், கே.கே.எம்.சதீஷ்குமார், உமாபதி, ஆனந்தராஜ்,
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் சாத்தனூர் வாசு, கமருதீன், வேதாந்திரி நகர் பாலு ஆகியோர் கூறினார்கள்.