உலகப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை ஒட்டி திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் முனைவர் காஜா நஜீமுத்தீன் சாஹிப் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இப்பேரணியில் 400க்கும் மேற்பட்ட மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பெண் குழந்தைகள் காப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
இந்நிகழ்வில் கல்லூரியின் பொருளாளர் ஜமால் முஹம்மது சாஹிப், கல்லூரி முதல்வர் முனைவர் இஸ்மாயில் முகைதீன், இயக்குனர் மற்றும் கல்லூரி நிர்வாகக் குழு கௌரவ உறுப்பினர் முனைவர் அப்துல் காதர் நிஹால், விடுதி ஒருங்கிணைப்பாளர் முனைவர் நாகூர் கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை கல்லூரியின் பாலிய பாலின சமத்துவ சங்கத்தின் ஆலோசகர் முனைவர் அப்துல் ரஷீத் ஹஸனீ மற்றும் போதை ஒழிப்போர் கழகத்தின் ஆலோசகர் முஹம்மது இஸ்மாயில் ஹஸனீ ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.