அப்துல்கலாம் அவர்களின் 92-ஆம் பிறந்த நாளில் முன்னிட்டு திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா.
மக்கள் சக்தி இயக்க திருச்சி மாவட்ட மாவட்ட செயலாளர் இரா.இளங்கோ,
மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், துணை பொதுச் செயலாளர் வெ.ரா.சந்திராசேகர் முன்னிலையில் நடந்தது.
திருச்சி மாவட்ட செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி கடந்த பத்து ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி தந்து அறப்பணி போல் ஆசிரியப் பணியாற்றும் ஆசிரியர்களை திருச்சி மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு வாழ்த்தினார்.
மேலும் அவர் பேசியதது: புத்தக வாசிப்பு என்பது ஒரு பொழுது போக்காக அல்லாமல் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். மனதை சங்கடப் படுத்தும் பல்வேறு காரணிகள் உள்ள இன்றைய சூழலில் புத்தக வாசிப்பது மனதை தெளிவுப்படுத்தும் சமுகத்தைப் பற்றிய நம்முடைய பார்வையை விரிவடையச் செய்யும் .மன உறுதி மேம்படும். “நம்மால் முடியும் ” என்ற தன்னம்பிக்கை உருவாக்கும், மாதம் ஒரு புத்தகம் திறன் ஆய்வு செய்ய வேண்டும் என கூறினார்.
மேலும்
ஆசிரியர்கள் கோ.அருணா (தமிழ்), ஆர்.சந்திராதேவி (ஆங்கிலம்) ஜே.சி. ரீனா (கணிதம்) ர.ஜெயந்தி (அறிவியல் ) ரு.அ. ராணி (சமூக அறிவியல் ) ஆகியோரை பாராட்டு சான்றிதழ், மற்றும் நினைவு பரிசு வழங்கி, ஆசிரியர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார்.
விழாவிற்கு மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் ஆர்.கே.ராஜா, நரேஷ், வெங்கடேஷ், ஆசிரியர்கள் மகேஸ்வரி, விக்டோரியா, மோச்சராணி, ஆசிரியர் பயிற்சியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.