திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம், என்ஐடி
பார்ன் ஹாலில் நடைபெற்றது.
பதிவாளர் டாக்டர்
தாமரைச்செல்வன், மருத்துவமனை ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர்.ஹேமலதா
தலைமையிலான என்ஐடி மருத்துவமனை குழு, என்எஸ்எஸ் மற்றும் திருச்சி ஜோசப்
கண் மருத்துவமனை குழு ஆகியோர் முகாமை நடத்தினர்.
தேசிய தொழில்நுட்பக்கழக இயக்குனர் டாக்டர் ஜி.அகிலா அவர்கள் முகாமை
தொடங்கி வைத்தார்.
கண் பராமரிப்பின் முக்கியத்துவம் மற்றும் கண் தானம்
குறித்த விழிப்புணர்வை பரப்புதல் குறித்து இயக்குனர் தனது கருத்துக்களை
பகிர்ந்து கொண்டார்.
டீன் மாணவர் நலன் டாக்டர்.என்.குமரேசன், என்எஸ்எஸ்
ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.கே.பன்னீர்செல்வம், இன்ஸ்டிடியூட் மருத்துவ
அலுவலர் டாக்டர்.ஆர்.பிரியங்கா ஆகியோர் உடனிருந்தனார்.
கண்
பரிசோதனைக்காகக் கூடியிருந்த மாணவர்கள் மற்றும் மக்கள் காத்திருப்புப்
பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இலவசமாக கண் மருத்துவரை அணுகி விரிவான
கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பயனாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட
கண்ணாடிகளைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது மற்றும் பார்வை
நோய்களுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டன.
முகாமில் சுமார் 250 பேருக்கு கண்
பரிசோதனை செய்யப்பட்டது