திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாலிபர் அடித்து கொலை.
திருச்சி மணச்சநல்லூரை சேர்ந்த குமாரசாமி என்பவரின் மகன் பாஸ்கர் (வயது 28).இவர் திருச்சி விராலிமலை அருகே உள்ள எம்.எம்.போர்ஸ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை பணிக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இவர் பிணமாக கிடந்துள்ளார்.
தகவல் அறிந்த கேகே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவலர்களின் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.அதுவும் காட்டுக்குள் சென்று தேசிய நெடுஞ்சாலை செய்து தரும் தூரம் சென்று திரும்பியது.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் திருநங்கைகள் தொல்லைகள் இருப்பதாக ஏற்கனவே பல புகார்கள் வந்துள்ளன.
இதனால் இவர் திருநங்கைகளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா,
அல்லது முன் விரதம் போன்ற வேறு ஏதும் காரணமாக என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .