இன்று ரபிஉல் அவ்வல் மாத பிறப்பு:வரும் 9ம் தேதி மிலாதுநபி பண்டிகை.திருச்சி டவுன் ஹாஜி ஜலீல் சுல்தான்.
திருச்சியில் ரபிஉல்அவ்வல் மாத பிறை:
9-ந்தேதி மிலாதுநபி பண்டிகை
அரசு ஹாஜி அறிவிப்பு.
திருச்சி மாவட்ட ஹிலால் கமிட்டி தலைவரும், திருச்சி மாவட்ட அரசு ஹாஜியுமான கே.ஜலீல் சுல்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
27-ந்தேதி(நேற்று) மாலை திருச்சியிலும், அதன் சுற்றுப்புறங்களிலும், மற்ற மாவட்டங்களிலும் ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை தென்பட்டதால் 28-ந்தேதி(இன்று) ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை ஆரம்பமாகிறது.
மேலும் வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படும்.
முஸ்லிம்கள் அனைவரும் நபிகள்(ஸல்) காட்டிய சுன்னத்தான வழியை பின்பற்றி நடந்து இறைவனை அதிகமாகத் தொழுது நபிலான வணக்கங்கள், தான தா்மங்களில் ஈடுபட்டு உணவு அபிவிருத்திக்காகவும், ஆயுள் அதிகரிக்கவும், நம் சகோதர சமுதாய மக்களுடன் ஒற்றுமையுடனும், மத நல்லிணக்கத்துடனும் இணைந்து வாழ இறைவனிடம் பிராா்த்தனை செய்ய வேண்டும்.
இவ்வாறு டவுன் ஹாஜி ஜலீல் சுல்தான் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.