Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அண்ணாவின் பிறந்த நாள் விழா.நிர்வாகிகள் திரளாக பங்கேற்க தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அழைப்பு

0

'- Advertisement -

அண்ணாவின் 114வது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட சார்பில் மணப்பாறையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது இதுகுறித்து புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

வருகின்ற 15.09.2022 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு,

பேரறிஞர் அண்ணா அவர்களின் 114-வது பிறந்த தினத்தையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது.

அதுசமயம் மாவட்ட கழக நிர்வாகிகள் மன்றம் எம்ஜிஆர், அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளீர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் அணி, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, வர்த்தக அணி, கலைப்பிரிவு, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் மற்றும், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் செயல்வீரர்கள் வீராங்கணைகள், மற்றும் கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகளும், கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.