
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில்
அண்ணா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை.
திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு எடுத்துக்காட்டிய அரசியல் ஆசான், தந்தை பெரியாரின் வாரிசாகவும்,முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அண்ணனாகவும் வாழ்ந்து மறைந்த அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை (15. ந் தேதி) வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின்உருவப்படத்திற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளோம்.
அதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் 15-ந் தேதி அன்று நடைபெறும் கழக முப்பெரும் விழாவில் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பின் பேரில்
திருச்சி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த நிகழ்வில் சட்டமன்றஉறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

