
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் மூன்று நாள் தியானப் பயிற்சி முகாம் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ஜெயபால் துவக்கி வைத்தார் .

பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதல்படி, பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளை மற்றும் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய மூன்று நாள் தியான பயிற்சி முகாம் இன்று (12.09.2022) திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இநத முகாமை கல்லூரி முதல்வர் ஜெ சுகந்தி தலைமையேற்று துவக்கி வைத்தார். தொழிலாளர் நலத்துறை திருச்சி மாவட்ட இணை ஆணையர் ஜெயபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல், இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலாளரும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளையின் தலைவருமான இன்ஜினியர் ராஜசேகரன், யூத் ரெட் கிராஸ் திருச்சி மாவட்ட அமைப்பாளரும் மற்றும் தந்தை பெரியார் அரசு கல்லூரியின் பேராசிரியருமான முனைவர் இரா. குணசேகரன், மற்றும் தியானப் பயிற்சியின் பயிற்றுநர்கள் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் இணை பதிவாளருமான ஜெ.பழனி ஈஸ்வரி ,இசக்கி டிசைன் அண்ட் ஸ்ட்ரக்சர் இயக்குனர் பி லதா, ஹாட் பில்லின்ஸ் மெடிடேஷன் ட்ரெயினர் நிருபமா, ஆகியோர் கலந்துகொண்டு தியான பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கினர்.
இந்த தியான பயிற்சி நாளையும் நாளை மறுநாளும் நடைபெறுகிறது,
இந்நிகழ்வில் யூத் ரெட் கிராஸ் அமைப்பைச் சார்ந்த 500 தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரியின் நூலகர் முனைவர் பார்த்தசாரதி நன்றியுரை வழங்கினார்.

