
ஸ்ரீரங்கம் பகுதியில்
செப்.13 ஆம் தேதி மின்தடை
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் செப்டெம்பர் 13 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை அடுத்து மின் விநியோகம் இருக்காது.
இது குறித்து, மின்வாரிய ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் ஆர்.செல்வம் தெரிவித்திருப்பது:
ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதை அடுத்து, அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஸ்ரீரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரயில்நிலையம் சாலை, அனைத்து உத்தர வீதிகள் மற்றும் சித்திரை வீதிகள், அடைவளஞ்சான் வீதிகள், பெரியார் நகர், அம்மா மண்டபம் சாலை, வீரேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் செப்டெம்பர் 13 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.45 முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

