Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சூதாட்டம் குறித்து கருத்து கேட்பு நடத்தும் ஒரே முதல்வர் ஸ்டாலின் தான்.திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.

0

'- Advertisement -

 

திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டியின் போது கூறியதாவது:

அதிமுக எப்போதும் மக்கள் தேவையறிந்து அவற்றை நிறைவேற்றும், ஆனால் திமுகவுக்கு மக்களைப் பற்றியோ நாட்டைப் பற்றியோ அக்கரையில்லை என்று சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

திண்டுக்கல் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்கேற்று விட்டு நேற்று இரவு திருச்சி வந்து, விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்ற அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி
திருச்சி விமான நிலையத்தில் அளித்த பேட்டியல் கூறியதாவது:-

உயர்நீதிமன்ற தீர்ப்பை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர், எனவே அது குறித்து இப்போது கூற முடியாது.நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் தீர்ப்பு வெளிவந்த பின்னரே ஏதும் கூறமுடியும்.

அதிமுக ஆட்சியின்போது, உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடந்தது. ஆனால், திமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர் தோல்வியுற்றதை கூட வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

வரப்போகும் கூட்டுறவுத் தேர்தலில் அதுபோல செய்ய விட மாட்டோம். மக்களுக்கு தேவையானவற்றை அதிமுக தொடர்ந்து செய்யும்.

இந்தியா ஜனநாயக நாடு அந்தந்த மதமும் அவரவர் தெய்வமும் அவரவருக்கு புனிதமானது. இணையதள குற்றம் அதிகரித்து வருவதும், போதைப் பொருள் அதிகளவில் பயன்படுத்தப்படுவது, ரம்மியை தடை செய்வது குறித்து பலமுறை கூறியும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

சூதாட்டம் குறித்து கருத்துக்கேட்பு நடத்தும் ஒரே முதல்வர் தமிழக திமுக முதல்வர்தான்.
அந்தளவுக்கு திமுக ஆட்சி உள்ளது.சட்டம் ஒழுங்கு கேட்டுப்போட்விட்டது. கொலை கொள்ளை தினசரி நடந்துதான் வருகிறது.

நாடு, மக்கள் குறித்து அக்கரை இல்லாத ஆட்சி தற்போது நடந்து வருகிறது. நீர் மேலாண்மை குறித்து அக்கரையுடன் செயல்பட்டது அதிமுக அரசு. முக்கொம்பு பாலம் உடைந்ததும் புதிய அணையை கட்ட நடவடிக்கை எடுத்தோம். தற்போது அதை இந்த முதல்வர் திறந்து வைத்தார் . இதுபோல மேலும் 3 நீர்மேலண்மை திட்டங்கள் தயாரானது, காவிரி குண்டாறு திட்டமும் நாங்கள் கொண்டு வந்து தொடங்கி வைத்தோம். ஆனால் அத்தனையும் கிடப்பில் போட்டுவிட்டது இந்த அரசு. தற்போது தண்ணீர் கடலில் வீணாகிக்கொண்டுள்ளது .
இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது
அதிமுக திருச்சி
மாவட்டச் செயலாளர்கள் ப. குமார், மு.பரஞ்ஜோதி,
அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், வளர்மதி, மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர்கள் சீனிவாசன், பொன்.செல்வராஜ்,திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு, முன்னாள் எம்எல்ஏ இந்திரா காந்தி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக விமான நிலையம் வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏராளமான அதிமுக தொண்டர்கள் திரண்டு வந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.