திருச்சி வரகனேரி அ/மி.பட்ட மரத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று தீர்த்த குடம் எடுத்துவரப்பட்டது.

திருச்சி வரகனேரி ஆனந்தபுரம் அருள்மிகு பட்ட மரத்து மாரியம்மன் மற்றும் நித்தியானந்தபுரம் முத்துக்கண் மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரியில் இருந்து தீர்த்த குடம் இன்று எடுத்துவரப்பட்டது.
திருச்சி வரகனேரி ஆனந்தபுரம் மற்றும் நித்தியானந்தபுரம் பகுதியில் அருள்பாலித்து வரும் அருள்மிகு பட்ட மரத்து மாரியம்மன், நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நித்தியானந்தபுரம் அருள்மிகு முத்துக்கண் மாரியம்மன் ஆலயத்திலும் வரும் 8 ஆம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
அதற்காக கடந்த மாதம் 21 ஆம் தேதி முகூர்த்த கால் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது.
அதன் ஒரு பகுதியாக இன்று காலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குடங்களில் புனித நீரை சுமந்து வந்தனர். அதனையடுத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

இன்று மாலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜையும், நாளை காலை இரண்டாம் கால யாக பூஜையும் நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து மூன்றாம் கால யாக பூஜை நாளை மாலை நடத்தப்படும். வியாழக்கிழமை காலை 5:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடத்தப்பட்டு 10.30 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடாகும். 10.50 மணிக்கு மேல் இரண்டு கோவில்களிலும் விமான கலசம் உட்பட அனைத்து கலசங்களிலும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

