தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைர் நம்பிராஜ் தலைமையில் திருச்சி தனியார் ஹோட்டலில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
கூட்டத்தில் வரும் செப்டம்பர் 10ம் தேதி சென்னை தீவு திடலில் தமிழக முதல்வர் பங்கேற்க்க கூடிய வாழ்வதார மாநாடு ஜாக் டே ஜியோ சார்பாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பாக 300க்கும் மேற்ப்பட்ட பேருந்துகளில் 100 வேண்களிலும் 25,000க்கும் மேற்ப்பட்ட தமிழக ஆசிரியர் கூட்டணி உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளதாக ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் இயற்றப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில பொதுச் செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் கூறுகையில்:-
வரும் செப்டம்பர் 10ம் தேதி சென்னை தீவு திடலில் தமிழக முதல்வர் பங்கேற்க்க கூடிய வாழ்வதார மாநாடு ஜாக் டே ஜியோ சார்பாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பாக 300க்கும் மேற்ப்பட்ட பேருந்துகளில் 100 வேண்களிலும் 25,000க்கும் மேற்ப்பட்ட தமிழக ஆசிரியர் கூட்டணி உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளதாக ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாழ்வாதர நம்பிக்கை மாநாட்டில் பங்கேற்க கூடிய தமிழக முதல்வர் ஜி.பி.எஸ்.ரத்து உள்ளிட்ட எங்களது அனைத்து கோரிக்கைகளும் ஏற்று தீர்வினை அறிவிப்பார் என செயற்குழு நம்புகிறது. அந்த வகையில் தமிழக முழுவதும் எங்களது ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் சந்திரசேகர் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.