Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நடைபெற்ற மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் காஜாமியான் பள்ளி அணி வெற்றி.

0

'- Advertisement -

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில்
மண்டல அளவிலான கால்பந்து போட்டி:

கோவை கேட்ச் ஸ்போர்ட்ஸ் சார்பில் மண்டல அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.

மதுரையை தொடர்ந்து திருச்சி மண்டல அளவிலான போட்டி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டனர். இதில் இறுதிப்போட்டி காஜாமியான்,
ஆல்பா பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் காஜா மியான் பள்ளி அணி ஆல்பா பள்ளியை 4-0 என்ற வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் காஜாமியான் பள்ளி தலைமை ஆசிரியர் கலீல்ரகுமான் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கினார்.

பரிசளிப்பு விழாவில் திருச்சி மாவட்ட கால்பந்து சங்க தலைவர் சிவகுமார், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மணிமாறன்,கேட்ச் ஸ்போர்ட்ஸ் நிர்வாகி, பயிற்சியாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர் .
அடுத்து சேலம், கோவையில் மண்டல அளவிலான கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் வின்னர்,ரன்னர் அணிகள் ஊட்டியில் செப்டம்பர் 30ந் தேதி முதல் 2ந் தேதி வரை நடைபெறும் மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று கோவை கேட்ச் ஸ்போர்ட்ஸ் நிர்வாகி, பயிற்சியாளர் சங்கர் கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.