திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில்
மாநில அளவிலான ஹாக்கி போட்டி.
பிரண்ட்ஸ் ஹாப்பி கிளப் ,மெமோரியல் ஹாக்கி கிளப் சார்பில் 7வது மெட்ராஸ் ரோலிங் டிராபி மாநில அளவிலான ஹாக்கி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் தமிழகத்தில் இருந்து திருச்சி, சென்னை கோவை, மதுரை உள்ளிட்ட 14 அணிகள் பங்கேற்றன.
நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றது. இறுதி போட்டி இன்று மாலை நடை பெற்றது.இதில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள், கோப்பை வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவில் திருச்சி ஜூடிசியல் நீதிபதி சிவகுமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

