Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பிபின் ஃபிட்னஸ் சென்டரின் 6ம் ஆண்டு தொடக்க விழா.கவுன்சிலர் முத்துச்செல்வம் வாழ்த்து.

0

'- Advertisement -

திருச்சி பிபின் பிட்னஸ் சென்டர் ஆறாம் ஆண்டு தொடக்க விழா.கவுன்சிலர் முத்துச்செல்வம் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்எம்எஸ் காலனியில் செயல்பட்டு வந்த பிபின் உடல் பயிற்சி நிலையத்தில் கடந்த ஆண்டு புதியதாக விரிவாக்கப்பட்ட குரூப் ட்ரெய்னிங் பிட்னஸ் சென்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சினிமா நடிகர்கள், அரசியல் பிரமுகர் போன்ற பிரபலமானவர்கள் மட்டுமே பெறக்கூடிய இப்பயிற்சியினை சாதாரண பொதுமக்களும் பெரும் வகையில் தென்னிந்தியாவில் முதல்முறையாக திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக யோகா தெரபி,ஜும்பா , பிட்னஸ் பாக்ஸிங்,உடல் பயிற்சி மூலம் உடல் எடை குறைக்கும் பயிற்சி, பாடி பில்டிங் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அனைத்தையும் யு.கே.வில் உள்ள YMCA வில் மாஸ்டர் ட்ரெய்னர் லேவல் 5 பட்டம் பெற்ற மிஸ்டர் இந்தியாவும் முன்னாள் இந்திய கப்பல் படை கமாண்டருமான உன்னி கிருஷ்ணன் (இந்த மையத்தின் உரிமையாளர்) அவர்கள் சிறப்பாக பயிற்சி அளித்து வருகிறார்.

பிபின் பிட்னஸ் சென்டரின் ஆறாம் ஆண்டு தொடக்க விழாவில் திமுக கவுன்சிலர் முத்துச்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த ஆறாம் ஆண்டு தொடக்க விழாவில் திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிபின் உடற்பயிற்சி கூடத்தில் பயின்ற,பயிற்சி எடுத்து வருகின்ற நபர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

பிபின் உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து பயன்பெற 98941 48723,8778034596 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.