Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரில் சென்று ஆசி பெற்ற மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஜெ.சீனிவாசன்.

0

'- Advertisement -

சென்னையில் ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கூட்டிய அஇஅதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதனை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு தொடர்ந்தார் இதில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தியது செல்லும் என இரு நபர் அமர்வு தீர்ப்பளித்தது.

இதனை தொடர்ந்து நேற்று காலை திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள  எம்ஜிஆர் சிலைக்கு மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் ஜெ.சீனிவாசன் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சென்று பூங்கொத்து வழங்கி ஆசி பெற்றார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.