திருச்சி செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி ஆங்கிலோ-இந்தியன் உயர்நிலைப்பள்ளியின் 257 வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஓ. ஞான சுகந்தி விளையாட்டு போட்டிகளை தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
திருச்சி தஞ்சை மறைமாவட்ட மகளிர் கூட்டமைப்பு தலைவர் கே. ரோசாலிண்ட் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த விளையாட்டு விழாவினை பள்ளி முதல்வர் சைமன் மற்றும் ஆசிரியர்கள்,பள்ளி ஊழியர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.

