திருச்சியில் எலும்பு மூட்டு தினத்தை முன்னிட்டு உயிர் காக்கும் முதலுதவி பயிற்சி.முகேஷ் ஆர்த்தோ கேர் மருத்துவமனையில் நடைபெற்றது.
எலும்பு மூட்டு தினத்தை முன்னிட்டு முகேஷ் ஆர்த்தோ கேர் மருத்துவமனை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மையம் மற்றும் திருச்சி ஆர்த்தோ மருத்துவர்கள் சங்கம் இணைந்து நடத்திய உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை பயிற்சி முகாம் திருச்சி அண்ணாமலை நகரிலுள்ள முகேஷ் ஆர்த்தோ கேர் மருத்துவமனையில் நடைபெற்றது.
இதில் தெற்கு மாவட்ட காவல்துறை துணை ஆணையர் பி. ஸ்ரீதேவி, உதவி ஆணையர் ஜோசப் நிக்சன் தலைமை வகித்தனர். காவலர்களுக்கு டாக்டர் முகேஷ் மோகன் மற்றும் டாக்டர் ஸ்ரீதேவி பயிற்சியளித்தனர்.
இதில் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.