கண்டோன்மெண்ட் காவல்துறை உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி.
தமிழகம் முழுவதும் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதில் ஒரு பகுதியாக திருச்சியில் இன்று காவல்துறை சார்பாக திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே திருச்சி கண்டோன்மெண்ட் சாரக காவல்துறை உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதேபோன்று கன்டன்மெண்ட் சரக காவல்துறை உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில் இன்று பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.