28ந் தேதி அன்பில் பொய்யாமொழி யின் 23 -ஆம் ஆண்டு நினைவு நாள்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்குமாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திராவிட இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கத்தின் புதல்வரும், திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தவருமான, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான, அன்பில் பொய்யாமொழியின் 23-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், அவரது த உருவப்படத்திற்கு 28ந் தேதி அன்று காலை 8:30 மணி அளவில் திமுக நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தப்படுகின்றது.
இந்நிகழ்வில் மாவட்ட,மாநில நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.