Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அகில இந்திய எலும்பு முட்டு தினம். இந்திய, திருச்சி எழும்பு முறிவு மருத்துவர்கள் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்.

0

 

அகில இந்திய எலும்பு மூட்டு தினத்தையொட்டி திருச்சியில் இலவச மருத்துவ முகாம்.

இந்திய எலும்பு முறிவு மற்றும் திருச்சி எலும்பு முறிவு மருத்துவர்கள் சங்கம் சார்பில் அகில இந்திய எலும்பு மூட்டு தினத்தை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே உள்ள இ.ஆர்.மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் மூத்த பேராசிரியர் டாக்டர் மதிவாணன், திருச்சி எலும்பியல் சங்க தலைவர் டாக்டர் ஜெய்கிஷ், செயலர் டாக்டர்கள் முகேஷ் மோகன், பரத்குமார், தேவேந்திரன், விஜய செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இந்த முகாமில் எலும்பு சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இந்த முகாமில் தேர்வு செய்யப்பட்ட நோயாளிகள் இலவச அறுவை சிகிச்சைக்காக முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் பயன் பெறும் வகையில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.