தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு
திருச்சி மாவட்ட செயலாளர் கங்காதர பாண்டியன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில்
மாநில துணை பொதுச்செயலாளநெல்லையப்பர், மாநில தலைமை கழக செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், மாநில மகளிர் அணி செயலாளர் நளினி சாந்தகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைவர் ஆணைப்படியும், கழகப் பொதுச்செயலாளர் ஆலோசனையின் படியும் கழகத்தின் மாவட்ட தலைவராக பொறுப்பேற்க உள்ள பொன்னுச்சாமி, மாவட்ட இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்க உள்ள மோகன், மாவட்ட இணைச் செயலாளராக பொறுப்பேற்க உள்ள கார்த்திக், மாநகர செயலாளராக பொறுப்பேற்க உள்ள ஜூஸ் கடை சுப்ரமணி, மாநகரம் மகளிரணி மற்றும் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், திருவெறும்பூர், இலால்குடி, மணிகண்டம், மணப்பாறை, அந்தநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு புதிய நிர்வாகிகள் பொறுப்புகள் விரைவில் வழங்கப்பட உள்ளது.