Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க காயல் அப்பாஸ் வலியுறுத்தல்.

0

'- Advertisement -

இஸ்லாமிய இளைஞர்களை நல் வழி கொண்டு செல்ல பள்ளி வாசல் ஜமாத்தார்கள் முயற்சி எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிக்ககூடிய காயல் பட்டிணம் – கீழக்கரை — அதிராம்பட்டிணம் – கூத்தாநல்லுர் – பரங்கி பேட்டை – லால் பேட்டை போன்ற பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய இளைஞர்களை கெடுக்கும் வகையில் சட்டத்திற்கு விரோதமான கஞ்சா என்கிற போதை பொருள் தலை விரித்தாடி வருகிறது.

போதை பொருளான கஞ்சாவை பயன் படுத்தி வரும் ஒரு சில இஸ்லாமிய இளைஞர்கள் போதையில் தன்னை அறியாமல் பல்வேறு குற்ற செயலில் ஈடுபட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இஸ்லாமிய இளைஞர்களை வாழ்க்கையில் அடுத்த கட்ட முன்னேற்றதிற்கு போக சிந்திக்க விடாமல் போதை பொருளான கஞ்சாவிற்கு அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையை சிரழித்து கேள்வி குறியாக்கி வரும் சமூக விரோத கும்பலை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது .

கஞ்சா போதையில் செய்யும் தவறுகளால் உங்களின் வாழ்க்கையை கேள்வி குறியாக மாறி வருகிறது என்பதை நீங்கள் உணர்ந்து கஞ்சா போதைக்கு அடிமையாகமல் அதிலிருந்து மீண்டு வர வேண்டு என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

இஸ்லாமிய மார்க்கத்தில் ஹராம் ஆக்க பட்ட போதை பொருளான கஞ்சாவினால் இளைஞர்கள் பலரும் பாதிக்க பட்டு வருகின்றனர். ஆகவே கஞ்சா போதையிலிருந்து மீட்டு எடுக்க இஸ்லாமிய இளைஞர்களை ஓன்றுனைத்து நல் வழியில் கொண்டு செல்ல தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாசல் ஜமாத்தார்கள் முயற்சி எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் .

எனவே தமிழகத்தில் போதை பொருளான கஞ்சாவை முற்றிலும் ஓழிக்க தமிழக அரசு துரித நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் இவ்வாறு காயல் அப்பாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.