15வது ஆசியக் கோப்பை டி20 போட்டி: இன்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் கேப்டன் நிசாகத் கான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்துள்ளது.
கடைசி ஓவரில் சூரியகுமார் யாதவ் 4 சிக்சர்கள் உள்பட 26 ரன்கள் குவித்தன் மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி 44 பந்துகளில் 59 ரன்கள் எடுக்க, சூர்யகுமார் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 26 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார்.
அடுத்து ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 152 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக பாபர் ஹயட் 41 ரன்களும், கின்சிட் ஷா 30 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப், ஜடேஜா ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டுகளை விழ்த்தினர்.
அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு 2வது அணியாக தகுதியடைந்துள்ளது.
நேற்று ஆப்கானிஸ்தான் அணி குருப் பி பிரியில் முதலாவது அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு குறிப்பிடத்தக்கது.

