தமிழக முதல்வர் உத்தரவின்படியும்,ஊரக உள்ளாட்சித் துறை மற்றும் குடிநீர் வழங்கள் வாரிய அமைச்சர் கே என் நேருவின் வழிகாட்டுதலின்படியும்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் – 2க்குட்பட்ட 13 வார்டு பகுதிகளை சேர்ந்த மாநகராட்சி தொடர்பான மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் மக்களைத் தேடி மாநகராட்சி முகாம் பாலக்கரை ஸ்ரீ மீனாட்சி திருமண மண்டபத்தில் நடைபெறறது.
முகாமில் பொதுமக்களின் மனுக்களை மேயர் மு. அன்பழகன் பெற்றுக்கொண்டார்.
பின்னர் மனுக்களுக்கு உடனடியாக அதிகாரியுடன் பேசி பயனாளிகளுக்கு கட்டிட அனுமதி, சொத்து வரி, பெயர் மாற்றம் உள்ளிட்ட ஆணைகளை உடனடியாக வழங்கினார்.
இந்த நிகழ்வில் நகரப் பொறியாளர் சிவபாதம், மாமன்ற உறுப்பினார்கள் லீலா வேலு, பிரபாகரன், ரிஸ்வானா பானு, சண்முகப்பிரியா, மண்டி சேகர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

