Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி.பட்டியலில் சேர்க்க கோரி அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு மற்றும் என்.சி.டி.சி சார்பில் ஆர்ப்பாட்டம்,

0

'- Advertisement -

திருச்சியில் தலித் கிறிஸ்தவர்களை
தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி ஆர்ப்பாட்டம்.

திருச்சிராப்பள்ளி
அனைத்து திருச்சபைகள் கூட்டமைப்பு மற்றும் தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை இணைந்து தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி.
பட்டியலில் சேர்க்க தவறிய மத்திய அரசை கண்டித்தும், கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க கோரியும் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சி.எஸ்.ஐ. திருச்சி மறை மாவட்ட தலைவர் வி.ராஜா மான்சிங் வரவேற்றார்.
பேரவையின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் எம். ஜான்சன் துரை தலைமை தாங்கினார்.

திருச்சி தஞ்சை திருமண்டல சி.எஸ்.ஐ. பேராயர் டாக்டர் டி. சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். திருச்சி கத்தோலிக்க மறை மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பணிக்குழு செயலாளர் எல். அந்துவான் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், எஸ்.சி. எஸ்.டி.பணிக்குழு மாநில
செயலாளர் குழந்தைநாதன், நல்லாயன் நிலைய இயக்குனர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

பேரவையின் தேசிய பொதுச் செயலாளர் இ.டி. சார்லஸ், உச்சநீதிமன்ற வக்கீல் பிராங்கிளின், புத்தூர் பங்குத்தந்தை பாஸ்கரன். மரியன்னை பேராய பங்குத்தந்தை சகாயராஜ், பேரவை மாநில துணை செயலாளர் அருண் மாஸ் இல்லாமணி கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாவட்ட செயலாளர் புஷ்பராஜ், கொள்கை பரப்புச் செயலாளர் ஜான் பிரகாஷ் எபினேசர், அவைத்தலைவர் ஜேக்கப், மாநில ஆசிரியர் அணி செயலாளர் ஆர்.எ. லூயிஸ், பேரவை திருச்சி மாவட்ட தலைவர் தேவக்குமார், மார்ட்டின் பிச்சை, திருவெறும்பூர் போதகர்கள் ஐக்கிய தலைவர் ஜான் பீட்டர், வேளாங்கண்ணி பெண்கள் பணிக்குழு செல்லின் மேரி, எஸ்.சி. எஸ்.டி. பணிக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் சபரி முத்து, மாநில பொருளாளர் சேன வராயன் மற்றும் திரளான கிறிஸ்தவ அமைப்பு சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.