Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இட ஒதுக்கீட்டில் முறைகேடு என திருச்சியில் ரயில்வே ஓ.பி.சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

0

'- Advertisement -

 

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பின
இரயில்வே தொழிலாளர் இயக்கம் சார்பாக
திருச்சி கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன்பாக, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பொது செயலாளர் அப்சல் அறிவுறுத்தலின்படி திருச்சி கோட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், மற்றும் சிறப்பு அழைப்பாளராக, உதவி பொதுச் செயலாளர் பிரசன்ன கிருஷ்ணன் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

தென்னக இரயில்வே முழுவதும் ஓபிசி பிரிவு தொழிலாளர்கள் அனைவருக்கும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு சரியான முறைப்படி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தும், ஓபிசி பிரிவினருக்கான பின்னடைவு,பதவி உயர்வு வாய்ப்பினை தாமதப்படுத்தி மூப்பு நிலை இழப்பு,பதவி உயர்வில் ரயில்வே வாரியம் வழங்கிய உத்தரவை மற்ற மண்டலங்களில் நடைமுறைப்படுத்தியது போல முறையாக இங்கேயும் அமல்படுத்த வேண்டும், பொருளாதார இழப்பை தடுக்க கோரியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தினை கோட்ட தொழிலாளர் நல நிதியுதவி கமிட்டி உறுப்பினர்.சகாய விஜயராஜ் ஒருங்கிணைத்தார்.

இந்த ஆர்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான ஓ பி சி பிரிவு அதிகாரிகள் மற்றும் தொழிலாளிகள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திடம் நூற்றுக்கும் மேற்பட்ட ஓ பி சி பிரிவு அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.