கலைஞரின் நினைவு நாளில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும்,
பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும்
கலைஞர் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.
மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான, அன்பின் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை.
கலைஞர் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, ஆகஸ்ட் 7 அன்று காலை திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள் தங்களுக்கு கீழ் இயங்கும் வட்ட, வார்டு, கிளை கழகங்களில் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஏழை எளியோருக்கும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த நிகழ்வில் சட்ட மன்ற உறுப்பினர்கள், மாநில,மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி,பேரூர், வார்டு, கிளை, கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

