திருச்சியில்
கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய வாலிபர்
போக்சோ சட்டத்தில் கைதானார்.
திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் மணிகண்டம் கீழப்பஞ்சபூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் சுரேஷ் (வயது 22) என்பவருக்கும் இடையே காதல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கல்லூரி மாணவியின் பெற்றோர் வேலை விஷயமாக வெளியே சென்ற நிலையில், வீட்டிற்கு சென்ற சுரேஷ் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் கல்லூரி மாணவி கர்ப்பமானார்.
இதற்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கன்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து வாலிபர் சுரேசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.