திருச்சி ரயில்வே கோட்டத்தில் விரைவு ரயில்களில் எல்.எச்.பி.நவீன பெட்டிகள் இணைப்பு. கோட்ட மேலாளர் தொடங்கி வைத்தார்.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் விரைவு ரயில்களில் எல் எச் பி நவீன பெட்டிகள் இணைப்பு
கோட்ட மேலாளர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருச்சி கோட்டத்தில் சில முக்கிய விரைவு ரயில்களில் எல்.எச்.பி ரயில் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.முதல் கட்டமாக திருச்சி – ஹவுரா – திருச்சி இப்பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.
ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்தும் முயற்சியாக, எல்.எச்.பி ரக ரயில் பெட்டிகள் மேம்படுத்தப்பட்ட பயணிகளின் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இப்பெட்டிகள் விபத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்ட தொழில்நுட்பத்துடன் இலகுரக துருப்பிடிக்காத எஃகு மூலம் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை ஐசிஎப் ரயில் பெட்டிகளோடு ஒப்பிடுகையில் அதிக இருக்கை வசதி, வேக திறன் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
பெட்டியின் உட்புறம் அலுமினியத்தகடுகளால் வேயப்பட்டு, ஒவ்வொரு பெட்டியிலும் அதிக வேகத்தில் பயணிக்கும் போது, பவர்பிரேக்கிங் செய்வதற்கான “மேம்பட்ட நியூமேடிக் டிஸ்க் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. நவீன உட்கட்டமைப்பு மற்றும் உடைமைகள் வைப்பதற்கான ரேக்குகளுடன் அகலமான காற்றோட்டமான ஜன்னல்களுடன் மின்னணு விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் இந்த நவீன ரயில் பெட்டிகள் திருச்சி – ஹவுரா இடையே இயக்கப்படும் விரைவ ரயிலில் இணைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற நிகழ்வில், நவீன ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்ட ஹவுரா விரைவு ரயிலை திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மனிஷ் அகர்வால் கொடி அசைத்து துவங்கி வைத்தார். மூத்த கோட்ட இயந்திரவியல் பொறியாளர் ஹனுமான் மீனா மற்றும் அலுவலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திருச்சியில் இருந்து முதன்மை பராமரிப்புடன் இயக்கப்படும் எல்.எச்.பி ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்ட முதல் விரைவு ரயில் இதுவாகும். இந்த ரயிலில் அதிக இருக்கை வசதி மற்றும் வேகத்துடன் கூடுதல் சஸ்பென்ஷன் திறன் கொண்ட அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. மேலும் ஏற்கெனவே இயக்கப்பட்ட ரயில்பெட்டிகளை ஒப்பிடும்போது இதில் கோடைகால தில் குளிர்சாதன வசதியுடன், குளிர் காலங்களில் வசதிக்காக வெப்பமூட்டும் வசதியும் நுண்செயலி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
அடுத்தபடியாக வேளாங்கண்ணி – வாஸ்கோடகாமா இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் இந்த எல்.எச்.பி ரயில் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன என கூறப்பட்டுள்ளது.