திருச்சியில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பாக சிறப்பு தொழுகை மற்றும் அன்னதானம்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருச்சி பீமநகர் தெற்கு யாதவ தெரு பகுதியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநில தலைவர் பீமநகர் ரபீக் தலைமையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தொழுகை முடிந்த பின் மாநில தலைவர் பீமநகர் ரபீக் கூறும்போது, இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மனிதருக்கும் இறைவன் வழங்கிய அருட்கொடைகளை நினைவு கூர்ந்து, இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் இத்திருநாள் இருக்கிறது. ஏழை, எளியோர், தேவையுடையோருக்கு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்த நிறைவில் மனம் மகிழ்ந்து கொண்டாடும் மகத்தான நாளாகவும் இப்பண்டிகை நாள் இருக்கிறது.
அந்த வகையில் திருச்சி பீமநகர் தெற்கு யாதவ தெரு பகுதியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பக்ரீத் பண்டிகையை கொண்டாடினார்கள். மேலும் எங்களது அமைப்பின் சார்பில் குறைந்தபட்சம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்கும் மதிய உணவாக பிரியாணி அவர்கள் இல்லம் தேடி வழங்கப்பட்டது.
அதாவது நாங்கள் உண்ணும் உணவே அனைத்து சமுதாய மக்களுக்கும் கடந்த பல ஆண்டுகளாக வழங்கி வருகிறோம். மேலும் கூட்டு குர்பானியும் வழங்கப்பட்டது. இதற்காக இறைவனுக்கும், அனைத்து சமுதாய மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பீமநகர் ரபீக் கூறினார்.