தரைக்கடை வியாபாரிகள் யாரிடமும் பணம் பெறவும் இல்லை, யாரும் கொடுக்கவும் வேண்டாம்.திருச்சி 53வது வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி அறிவிப்பு.
திருச்சி 53 வது வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி அவர்கள் மத்திய பேருந்து நிலையம் சுற்றி.உள்ள தரைக்கடை, தள்ளுவண்டி உரிமையாளர்களிடம் தினம் ரூ.200 விதம் மாதம் ஒன்றை லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும் தராதவர்கள் கடைகள் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் ஆக்கிரமிப்பு என கூறி அகற்ற சொல்வதாகவும் கடந்த நான்கு நாள் முன்பு மாநகராட்சி வாயிலில் தரைக்கடை வியாபாரிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதை திருச்சி எக்ஸ்பிரசில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம்.
இதனை அடுத்து நம்மை தொடர்பு கொண்ட 53வது வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி எனவும்,நான் அல்லது எனது சார்பில் யாரும் எந்த தரைக் கடை வியாபாரிகள் மற்றும் யாரிடமும் எந்த வகையிலும் பணம் கேட்கவில்லை என உறுதி கூறுகிறேன்.
மேலும் எனது பெயரைக் கூறி யார் பணம் கேட்டாலும் கொடுக்க வேண்டாம் என எனது வார்டுக்கு உட்பட்ட வியாபாரிகளிடம் மற்றும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்
மேலும் மக்கள் சேவை செய்ய தான் நான் மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் கூறி உள்ளார்.