காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
.காமராஜரின் திருவுருவப் படத்திற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் மலர் தூவி வணங்கினர்.
விழாவிற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா தலைமை ஏற்றார். அவர் தனது தலைமை உரையில் காமராஜரின் அரசியல் தூய்மை, கல்வியிலும் தொழில் துறையிலும் அவர் செய்த ஆக்கப்பணிகள் போன்றவற்றை எடுத்துரைத்தார்.
ஊர் தோறும் பள்ளிகளைத் திறந்து கல்வியை அனைவர்க்கும் பொதுவாக்கியதோடு மதிய உணவுத் திட்டத்தையும் செயல்படுத்தினார். அதனால்தான் அவரது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுகிறோம் என்று எடுத்துரைத்தார்.
ஆசிரியர் தண்டபாணி தனது வாழ்த்துரையில் காமராஜரின் எளிமை பற்றியும் தன்னலமற்ற தொண்டு பற்றியும் விளக்கிக் கூறினார்.
அதனைத்தொடர்ந்து மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, வாசகம் எழுதுதல் முதலிய போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியின் நடுவர்களாக ஆசிரியர் தேவசுந்தரி, சத்யா ,சித்ரா ஆகியோர் செயல்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியில் ஆசிரியர் நிர்மலா நன்றி கூறினார்.