
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவி மினி ஹாலில்
தி பேங்க் ஆப் இந்தியா ஓய்வு பெற்றவர்கள் கூட்டமைப்பின் (சென்னை)
பொது குழுகூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்க்கு கூட்டமைப்பின் தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார்.
செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் ஜம்புநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பென்ஷன் உயர்வு வழங்க வேண்டும், ஓய்வூதியம் பெறுவோருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்க வேண்டும்,
ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் அல்லது நீக்கவும் வழிவகை செய்ய வேண்டும்,
மேலும் 1-1-86க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு பென்ஷன் தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
கண்ணன்,
லட்சுமணன்,
யோகநாதன் ஆகியோர் இந்த பொதுக்குழுக்கான ஏற்பாடுனை சிறப்பாக செய்து இருந்தனர்.

