திருச்சியில் நல்லுசாமி அண்ணாவி அத்லெடிக்ஸ் அகாடமி சார்பில் இளையோருக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
திருச்சியில் நல்லுசாமி அண்ணாவி அத்லெட்டிக்ஸ் அகாடமி சார்பில் 15 ஆம் ஆண்டு இளையோர் விளையாட்டுப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
திருச்சியில் நல்லுசாமி அண்ணாவி அத்தலாடிக்ஸ் கிளப் மற்றும் ரயில் ஸ்போர்ட்ஸ் கிளப் அத்லெட்டிக் அகாடமி சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் 15 ஆம் ஆண்டு இளையோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

தடகளம்,கால்பந்து,கைப்பந்து மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது.இப்போோட்டிகளில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 1500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு போட்டியில் ரயில்வே எஸ்.பி. ஆனந்தன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் விளையாட்டு அலுவலர் கலைச்செல்வன் மற்றும் அன்பழகன், தாமஸ் ஞானராஜ்,சைமன் சுகுமார், ராஜு, பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை அண்ணாவி,
சேதுராமன், சேஷாத்ரிநாதன்,
பாக்கியலட்சுமி,
மோதி அருண்,
உமா மகேஸ்வரி ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.