Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி பெருநகர் வட்ட 26 வது மாநாடு,

0

'- Advertisement -

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி பெருநகர் வட்ட 26வது மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஓட்டல் அருண் சுமங்கலி மஹாலில் தோழர்.பஞ்சரத்னம் நினைவரங்கத்தில் நடந்தது.

மாநாட்டிற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். மாநாட்டு கொடியை லால்குடி கோட்ட இணைச் செயலாளர் இருதயராஜ் ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை பெருநகர் வட்ட துணைத்தலைவர் பழனியாண்டி வாசித்தார். மண்டல செயலாளர் அகஸ்டின் துவக்க உரை ஆற்றினார். வேலை அறிக்கையை பெருநகர் வட்ட செயலாளர் எஸ்.கே. செல்வராஜ் வாசித்தார். வரவு – செலவு அறிக்கையை பொருளாளர் இருதயராஜ் சமர்ப்பித்தார். சங்க மாநிலத் துணைத் தலைவர் ராஜாராமன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க திருச்சி மண்டல தலைவர் சீனிவாசன், தமிழ்நாடு மின் ஊழியர் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநிலத் துணைத் தலைவர் பஷீர், சிஐடியு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜன், சங்க முன்னாள் மண்டல செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டில் விவசாயத்திற்கும், ஏழை, அடித்தட்டு மக்கள் குடிசை வீடுகளுக்கும் இலவச மின்சாரத்தை வழங்கி சேவை செய்து வரும் சேவை துறையாம் மின் துறையை தொடர்ந்து பொதுத்துறையாகவே பாதுகாக்க வேண்டும்.

மின்வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சம்பளம் இல்லாமல் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தினக்கூலியாக ரூ 380ஐ வாரியமே நேரடியாக வழங்க வேண்டும். அவர்களை படிப்படியாக நிரந்தர படுத்த வேண்டும்.

கேங்மேன் பணியாளர்களின் பயிற்சி காலத்தை 3 மாதங்களாக குறைத்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு ஊர் மாறுதல் வழங்க வேண்டும்.

விடுப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். விபத்து சிகிச்சைக்கான வாரிய உத்தரவு எண் 22 -2013 ஐ கேங்மேன் பணியாளர்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும். மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள், அலுவலர்கள், பொறியாளர்கள் உட்பட அனைவருக்கும் 1.12. 2019 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்கி, ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும்.

மின்வாரியத்தில் உள்ள 52 ஆயிரம் காலிப் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி தொழிலாளர்கள், பொறியாளர்கள், அலுவலர்களுக்கு நிறுத்தப்பட்டிருந்த பஞ்சப்படி மற்றும் சரண்டர் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில செயலாளர் உமாநாத் நிறைவுறையாற்றினார்.
முன்னதாக பெருநகர் வட்ட இணை செயலாளர் நடராஜன் வரவேற்றார். முடிவில் கிழக்கு கோட்ட செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.